கும்பகோணத்தில் அம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா
கும்பகோணத்தில் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்குவது வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் வரம் தருபவர் இவளே
மோதிலால் தெருவில் உள்ள ஸ்ரீ சப்தமாதா பீடாஹாரிணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது .

வழக்கம் அதுபோல இவ்வாண்டு கடந்த 5 ஆம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று மகாமகம் குளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, வேல், காவடி, பால்குடம், அலகுகாவடி, எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்குதல் கஞ்சிவார்த்தலும்,
பின்னர் இரவு அம்மன் வீதிஉலா நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர்கள் விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


