in

கும்பகோணம் பள்ளி தீ விபத்து – 22ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து – 22ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

கும்பகோணத்தில் 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த கோர தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவு தினம் இன்று கண்ணீருடன் அனுசரிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு விபத்து நடந்த பள்ளி வளாகம் முன்பு உயிரிழந்த குழந்தைகளின் திருவுருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மாணவர்கள் அந்த படங்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த தங்களது பிள்ளைகளுக்கு விருப்பமான உணவுப் பொருட்களை படையலிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர்.

22 ஆண்டுகள் கடந்தும் அந்த கருப்பு தினத்தின் வலி இன்னும் கும்பகோணம் மக்களின் மனதில் ஆறாத ரணமாக உள்ளது.

What do you think?

நாகை அக்கரைப்பேட்டையில் சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா தேர்பவனி