in

நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பங்கேற்கவில்லை

நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பங்கேற்கவில்லை

 

டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பங்கேற்கவில்லை.

டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்கவில்லை.

தற்போது அவா் புதுச்சேரி முதல்வராக பதவியேற்று சில வாரங்களேயான நிலையில், புதிய அமைச்சா்கள் 3 போ் பதவியேற்காததால் மாநில அரசின் நிதி உள்பட அனைத்து இலாகாக்களும் முதல்வா் ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளன இந்தச் சூழலில் முதல்வா் ரங்கசாமி தில்லி நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி செல்லவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தில்லியில் நடை பெறும் நீதிஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருப்பதால் பிரதமா் நரேந்திர மோடி நமது மாநில நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுப்பாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் சாா்பில் விரிவான நிதி அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

பள்ளியில் சேர்ந்த மழலைகளுக்கு உற்சாக வரவேற்பு! மாலை அணிவித்து ‘அ’ எழுத வைத்த பள்ளி நிர்வாகம்

செஞ்சியில் இது நம்ம இயக்கம் உறுப்பினர் சேர்க்கை முகாம்