செஞ்சியில் இது நம்ம இயக்கம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் “இது நம்ம இயக்கம்” உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட விழுப்புரம் சாலையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கிழக்கு ஒன்றியத் தலைவர் தாராசிங் என்கிற சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள “இது நம்ம இயக்கத்தில்” புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.டி. ராஜேந்திரன் கலந்து கொண்டு, இயக்கத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அப்போது பேசிய அவர், அண்ணாமலை தலைமையிலான “இது நம்ம இயக்கத்தில்” இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் பொதுமக்களிடம் பரவலாக சென்றடையும் நிலையில், உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் நிர்வாகிகள் கோகுல், என். ராமு, நாகராஜ், கபிலன்,ராஜ், மஸ்கட் வெங்கடேசன், பேட்டைபிரவீன், சங்கர்,வி. ஆறுமுகம், ஏழுமலை, அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், பாஜக முன்னாள் செஞ்சி கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சிவாஜி நன்றி உரையாற்றினார்.


