in

வந்தவாசியில், வெட்டப்பட்ட மரத்துக்கு அஞ்சலி செலுத்தி பசுமைத்தாயகம் போராட்டம்


Watch – YouTube Click

வந்தவாசியில், வெட்டப்பட்ட மரத்துக்கு அஞ்சலி செலுத்தி பசுமைத்தாயகம் போராட்டம்

 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சாலை ஓரங்களில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்களுக்கு பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத்தாயகம் மாநில ஆலோசகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது .

வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பினர் சாலை ஓரத்தில் வெட்டி கிடத்தப்பட்டிருந்த மரத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, ஒரு மரண நிகழ்ச்சிக்கு இறுதி காரியம் செலுத்துவது போன்ற சங்கை ஒலித்து மேளம் வாசித்து ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உலகத்தில் உள்ள பெருங்கடல்களில் எல்லாம் ஒரே நேரத்தில் ஆழிப்பேரலைகள் உருவாவதும், வெயில் அளவிற்கு அதிகமாக காய்வதும், மனித குலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன. இதற்கு நாம் பசுமையை அழித்த போக்கே காரணமாகும். சாலை விரிவாக்கத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல நாம். ஆனால் ஆண்டாண்டு காலமாக வளர்க்கப்பட்ட மரங்கள் தகுந்த அமைப்பினரின் ஆலோசனையின் பேரில் அகற்றப்பட்டிருக்கலாம்.

நம்மோடு வாழ்ந்த மரம்,நமக்காக வளர்ந்த மரம், அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டத்தை கண்டித்தும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரங்களை மறு நடவு செய்ய வேண்டும். பசுமையை காப்பாற்றுவதன் மூலமாக உலகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் .இதன் மூலமாக உலக மனித சமுதாயத்தை வாழ வைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளரும் பசுமைத்தாயக மாநில ஆலோசகருமான டாக்டர் அ. கணேஷ் குமார் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில்,வந்தவாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாபு விஜயன், தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சக்தி, தேர்தல் பொறுப்பாளர் என்.எஸ்.மணி, வந்தவாசி நகர செயலாளர் வரதன், நகர் மன்ற உறுப்பினர் ராமஜெயம், மாவட்ட பாமக செயற்குழு உறுப்பினர் கராத்தே சரவணன், மற்றும் பசுமைத்தாயக அமைப்பினர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

கம்பம் பகுதியில் பலத்த காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் ஒடிந்து சேதம்….

டைட்டானிக் நடிகர் மரணம்