ஆடி வளர்பிறை பிரதோஷம்: சித்தானந்தா கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்நாளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமான், நந்தி, பார்வதி தேவி மற்றும் சூரிய பகவானை வழிபடுவது சிறந்ததாகும். பால், தேன், தயிர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை சமர்ப்பித்து, இயன்ற அளவில் அன்னதானம் செய்வதும் நல்லது.

அவ்வாறு செய்தாங் சிவன்–பார்வதி அருள், மன அமைதி, சந்திர தோஷ நிவர்த்தி, தொழில் மற்றும் வியாபாரத் தடைகள் நீக்கம், குடும்ப நலம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இதையொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்த கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


