in

சாரத்தில் ஆடி அமாவாசை கடல் தீர்த்தவாரி; திரளான பக்தர்கள் பங்கேற்பு

சாரத்தில் ஆடி அமாவாசை கடல் தீர்த்தவாரி; திரளான பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில், 4-ஆம் ஆண்டு ஆடி அமாவாசை கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியையொட்டி, காலை சுப்ரமணிய சுவாமி, சாரம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கடலுக்கு எழுந்தருளி, காலை 9 மணிக்கு மகா அபிஷேகத்துடன் தீர்த்தவாரி மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவர் பல்லக்கில் வைத்து புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அரிசி மாவு,திரவிய பொடி, சந்தனம்,பால், மஞ்சள்,இளநீர் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பிறகு சாமியை கடலுக்கு எடுத்துச் சென்று கடலில் நீராடி அங்கிருந்து கொண்டு வந்து கலச அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

உபயதாரர் மேற்கு பிருந்தாவனம், கலியமூர்த்தி,அவர்கள்,தேவஸ்தான அர்ச்சர்கள் சிவராம குருக்கள், ஆகமபிரவீணா.
கார்த்திகேய குருக்கள், ஆகமபூக்ஷணம்.
முத்துகுமாரசாமி, உதவி தம்புரார்.
ஆலய நிர்வாக அதிகாரி பொன். நீலகண்டன், மற்றும் ஊர் பெரியவர்கள் செய்திருந்தனர்..

What do you think?

மூதாட்டியை கவனிக்காத மகன்கள் – ஆட்சியரிடம் மனு!