இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள்
இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள் இருவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி அளித்த கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை காலை சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக ரமேஷ் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு எஞ்சின் பழுதாகி நெடுந்தேவு அருகே உள்ள குயிந்தா கடற்பரப்பில் உள்ள பாறைகளுக்குள் சிக்கி படகு தரை தட்டி நின்றது. சூறைக்காற்று காரணமாக தடை தட்டி நின்ற படகில் ரமேஷ் உட்பட 11 மீனவர்கள் சிக்கித் தவித்தனர். இத்தகவலை கேள்விப்பட்ட இலங்கை கடற்படை படகில் தத்தளித்த பதினோரு மீனவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற தகவல் கேள்விப்பட்ட த வெ க. ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்வழி ஜெயபாலா கரை உரை சேர்ந்த மீனவர் செந்தில் குடும்பத்தினரையும், ஆத்திக் கிடைச் சேர்ந்த மீனவர் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி செய்தார்.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டினை ராமேஸ்வரம் த வெ க நகர பொறுப்பாளர் பொன். பஞ்சா செய்திருந்தார்.
இந்நிகழ்வில் தவெக மாவட்ட பொருளாளர் சரவணன், மண்டபம் பேரூர் கழக நகர்துணைசெயலாளர் பிரபு, ராமேஸ்வரம் நகர் கழக நிர்வாகி கண். இளங்கோ, நகர் இளைஞர் அணி செயலாளர் பிரசன்னா, 21 வது வார்டு செயலாளர் மாரீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
