in

டெல்லி தாக்குதலைக் கண்டித்து சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

டெல்லி தாக்குதலைக் கண்டித்து சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை தாக்கியதைக் கண்டித்தும், நீட்தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்வளவன் தலைமை வகித்தார். சிதம்பரம் மக்களவை தொகுதி செயலாளர் செல்லப்பன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய அமைச்சர் பதவி விலக கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

மாமன்றத்தில் விஜய் படம் வைக்க முயற்சி; திமுக-தவெக இடையே பரபரப்பு

இணைப்பு சாலை கோரி கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு