in

இணைப்பு சாலை கோரி கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு

இணைப்பு சாலை கோரி கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு

50 ஆண்டு காலத்திற்கு மேலாக நிலவிவரும் பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பெரிய நெற்குணம் கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமத்திலிருந்து வெளியிடங்களுக்கு வருவதற்கு 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை இருந்து வருகிறது. அதனால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை பட்டு வருகின்றனர்.

அதனால் பெரிய நெற்குணம் கிராமத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ள சின்ன நெற்குணம் கிராமத்தின் வழியாக முக்கிய சாலைக்கு வருவதற்கான இணைப்பு சாலை வேண்டுமென கிராம மக்கள் பலகட்ட கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை தீர்வு என்பது கிடைத்த பாடில்லை.

அதனால் தற்போது இணைப்பு சாலை கேட்டு கிராம மக்கள் புவனகிரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இணைப்பு சாலை இல்லாததால் 15 கிலோமீட்டர் சுற்றி சென்று கிராமத்திற்கான அடிப்படை தேவைகளை பெறவேண்டிய வேதனையான நிலை இருந்து வருகிறது.

அவசர கால வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட எதுவுமே வர முடியாத நிலையில் முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட முடியாத நிலை இருப்பதாகவும், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக துன்பத்தை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர். அதிகாரிகள் தங்களுக்கு நிரந்தர தீர்வாக இணைப்பு சாலை அமைத்து தங்கள் குடியிருப்பு மக்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

What do you think?

டெல்லி தாக்குதலைக் கண்டித்து சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு; பொதுமக்களுக்கு அன்னதானம்