முதல்வர் விஜய் குறித்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு
தூத்துக்குடி முதல்வர் விஜய் குறித்து வாளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு. போலீசார் காலையிலேயே கைது செய்து தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
போலீசார் தீவிர விசாரணை. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து வழிகளையும் மூடி தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறை பாதுகாப்பு,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் விஜய் வந்தால் எலும்பை உடைப்போம் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது..
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக வடக்கு மாவட்டச் செயலாளரும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பாலசுப்பிரமணியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மார்க்கண்டேயன் எம் எல் ஏ குறித்து புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி தலைமையிலான காவல்துறையினர் இன்று அதிகாலை அவரை விளாத்திகுளத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக கட்சியினர் போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்து அவரைக் கொண்டு செல்ல விடாமல் தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயனை போலீசார் அழைத்து சென்ற நிலையில்,
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.. அங்கு அவரிடம் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்..
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் யாரும் உள்ளே செல்லாதபடி அனைத்து பகுதிகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது..

மேலும், செய்தியாளர்கள் 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தடுப்பு அமைத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது..
மேலும் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஏராளமான திமுகவினர் மற்றும் மார்க்கண்டேயன் எம் எல் ஏ ஆதரவாளர்கள் திரண்டு வந்து காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் மார்க்கண்டேயனுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இருப்பதால் அவருக்கு தேவையான சர்க்கரை நோய் இரத்த அழுத்தத்திற்கு பயன்படக்கூடிய மாத்திரைகளை மற்றும் சத்து மாத்திரைகளை அவரது உதவியாளர்கள் விசாரணை நடைபெற்று வரும் மார்க்கண்டே எண் எம் எல் ஏ வழங்க காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு காவல்துறையினர் அவரின் உதவியாளரிடம் இருந்து உள்ளே வாங்கி சென்றனர்.


