in

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி

 

தமிழகத்தில் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் அத்துமீறல்கள் மற்றும் கொடூரமான கொலைகளை கண்டித்தும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. மதுரை தெற்கு வாசல் பகுதியில் தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமியர்கள்,ஆண்கள் கலந்துகொண்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு கிரைம் பிராஞ்ச் வரை பேரணியாக சென்றனர்.

இதனை தொடர்ந்து கிரைம்பிராஞ்ச் பகுதியில் தமிழகத்திலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் , பாலியல் குற்றங்களை தடுக்க தவெகஅரசு நடவடிக்கை எடுக்க கோரியும், பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை வழங்க கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த பேரணியை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்சாரி :

பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டிய மண்ணில், இன்று அவர்கள் அச்சத்துடனும் பதற்றத்துடனும் வாழும் நிலை உருவாகியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் சிறுமிக்கும் பாதுகாப்பில்லை; வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை என்ற அவலநிலை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. அவை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. கொடூரமான பாலியல் குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

What do you think?

சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனார் வீதிஉலா!