தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாடினர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது தேரிழந்தூர் கம்பர் பிறந்த இந்த ஊரில் அவர் பெயரில் அமைந்துள்ள கம்பர் உயர்நிலை பள்ளியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் படத்தை பள்ளியில் வைக்க தலைமையாசிரியரிடம் வழங்கிய தமிழக வெற்றி கழக பிரமுகர் ஆர்.கே. கார்த்திக் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் ரசிகராய் இருந்து மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வந்துள்ளார் .
மேலும் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தேரிழந்தூரில் பேருந்து நிலையம் அருகில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து தேரிழந்தூர் அரசு மேல்நிலை பள்ளியிலும்,உயர்நிலை பள்ளியிலும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் பின்னர் பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு இருக்கைகள் தேவை என கோரிக்கைகள் விடுத்ததை முன்னிட்டு மூன்று பேர் அமரும் 20 மேஜை நாற்காலிகள் வழங்க ஒப்புதல் அளித்தார் இதனை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் பெரிதும் மகிழ்ந்து உற்சாகமடைந்தனர்.


