in

28 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

28 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

 

28 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் – புனித நீர் ஊற்றி நடைபெற்ற கோலாகல விழா

ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலயம் – மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர், அருள்தரும் ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த நாட்களாக சிறப்பு பூஜைகள், யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், கும்ப பூஜை, மஹாகணபதி ஹோமம், மஹாலெக்ஷ்மி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோமாதா பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகள் மங்கள இசை மற்றும் வேத பாராயணத்துடன் நடைபெற்றது. மூல மந்திர ஹோமம், சிறப்பு யாகங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து இன்று காலை புனித குடங்களில் கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களுடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தாமிரபரணி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்து, அந்த தீர்த்தத்தால் ஸ்ரீ காந்தாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

கி.பி 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஆதவ் அர்ஜுனா எம்எல்ஏக்களை விலை பேசி வாங்கி வருகிறார்- நயினார் நாகேந்திரன் பேட்டி