கி.பி 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
செஞ்சி அருகே கி.பி 11 ஆம் நூற்றாண்டில் குளத்தை வெட்டி மக்களுக்கு தானமாக கொடுத்த சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு.
*ஸ்வஸ்தி மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய குலோத்துங்க சோழ தேவற்குயாண்டு (31)வது இக்கேணி என்னுடல்லிட்டு எனக்குத் தன்மமாக செய்தேன் சம்புவராய முதலிகளில் கண்ணிறைஞ்ச பெருமாள் அங்கராயனேன்” என்று அந்த கல்வெட்டில் எழுதப்பட்டு உள்ளது.*
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவரும், செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியருமான முனைவர் எ.சுதாகர் தமிழ்த்துறை மாணவர்களுடன் களப்பணி மேற்க்கொண்டார். அப்போது பழமையான குளத்தின் அருகில் உள்ள பாறையில் கி.பி 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அந்த கல்வெட்டில்
“ஸ்வஸ்திஸ்ரீ மதுரை
யும் பாண்டியன் முடி
த்தலையுங் கொண்ட
ருளிய குலோத்துங்
க சோழ தேவற்கு யாண்
டு ௩௰௧(31)வது இக்கேணி
என்னுடல்லிட்டு எனக்
குத் தன்மமாக செய்தே
ன் சம்புவராய முதலிகளில்
கண்ணிறைஞ்ச பெருமாள்
அங்கராயனேன்” என்று அந்த கல்வெட்டில் எழுதப்பட்டு உள்ளது.

இந்த கல்வெட்டு குறித்து விளக்கம் அளித்த முனைவர் சுதாகர் இந்த கல்வெட்டு 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டு என்றும் இதில் “மங்கலம் உண்டாகுக என்று இந்த கல்வெட்டு தொடங்குவதாகவும் மதுரை மன்னன் பாண்டியன் தலையை கொன்ற பெருத்தங்கள் சோழன் காலத்தில் 31வது ஆட்சி ஆண்டில் இந்த கேணி வெட்டப்பட்டு தானமாக தரப்பட்டது என்றும் இந்த குளத்தை வெட்டியவர்கள் சம்பூர் ராய முதலியார் கண்ணிரஞ்சே பெருமாள் அங்கராயன் போன்றோர்கள் இந்த குளத்தை மக்களுக்கு தானமாக வெட்டி தந்துள்ளார்கள் என்று கல்வெட்டில் எழுதப்பட்டு உள்ளது என்று கூறினார்.


