in

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சராக வேண்டும் என சபாநாயகர் செல்வம் விருப்பம்


Watch – YouTube Click

புதுச்சேரி…காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கூடாது…

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சராக வேண்டும் என சபாநாயகர் செல்வம் விருப்பம்…காங் தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேட்டி…

புதுச்சேரியில் உள்ள மீனவப் பகுதிகளில் நெடுங்காலமாகவே கடல் சீற்றங்களால் ஏற்படும் கடலரிப்பின் காரணமாக வீடுகளும் பல இடங்களில் தெருக்களும் கூட கடலில் மூழ்கியுள்ளன.

இக் கடலரிப்பைத் தடுக்க, துாண்டில் வளைவு அமைக்க கோரியும்
அரியாங்குப்பம் ஆற்றினை தூர்வாரி, ஆழப்படுத்திடக் கோரியும்
மீனவ மக்களை பழங்குடியினர் வரிசைப் பட்டியலில் சேர்க்கக் கோரியும்
வலியுறுத்தி அரியாங்குப்பத்தில் மாநில மீனவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்க எம்பி, முன்னால் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ வி சுப்பிரமணியம், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் மீனவர்கள் வைக்கும் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வதில்லை அது நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கூடாது என்பதை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்ற காங் தலைவர் வைத்திலிங்கம் எம்பி,
இதே நிலைபாட்டில் தான் தமிழக திமுக அரசு உள்ளது. இதை தான் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் வைத்துள்ளன என்றார்.

புதுச்சேரி சட்டமன்ற கட்டிடத்தை பற்றி பேசும் சபாநாயகர் செல்வம் அவரது தொகுதியில் கடல் அரிப்பை பற்றி பேசுவதில்லை.சட்டமன்ற கட்டிடம் இல்லையென்றால் மக்கள் வாழ மாட்டார்களா..? சட்டமன்றம் குறித்து 111 முறை பேசியும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை..அழைக்கும் தூரத்தில் உள்ள தமிழிசையிடம் பேசியிருக்க வேண்டும்..கொடுக்கவில்லை என்றால் மறியல் செய்ய வேண்டும்.

இவை அனைத்து கடைசி நேர நாடகம்.. அவர் சபாநாயகர்
பதவியை அவர் வகிக்கவில்லை. ஒரு கட்சியின் எம்எல்ஏவாக தான் இருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எப்படியாவது அமைச்சராக வேண்டும் என நோக்கிலேயே செயல்படுகிறார் என வைத்திலிங்கம் எம்பி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

பட்டப்பகலில் திருவண்ணாமலை நகரில் உள்ள பியூட்டி பார்லரில் பதறவைக்கும் சம்பவம்