in

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும்


Watch – YouTube Click

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும்

 

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறு தானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா காட்டேரி குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. விழாவில்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின் படி புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் தினை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறு தானியங்கள் அடங்கிய 20 கிராம் அளவிலான பிஸ்கட் மற்றும் மிட்டாய் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.

விழாவில் கலந்து கொண்ட பேசிய முதல்வர் ரங்கசாமி.. புதுச்சேரியில் உள்ள மாணவர்களுக்கு அரசு என்னென்ன திட்டங்கள் அறிவித்ததோ அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையை இந்த அரசு ஒருபோதும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டார்.

இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணணி வழங்கப்பட்டு வருகிறது அதே போன்று சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.

மேலும் மாணவர்கள் நலன் கருதி கடந்த காலங்களில் இலவசமாக ரொட்டி பால், பழங்கள் வழங்கப்பட்டு வந்தது ஆனால் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டது மீண்டும் அவை தொடங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் தற்போது மதிய உணவு உடன் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது இனிமேல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும் என்றார்.

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட ரங்கசாமி வரும் காலங்களில் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலையில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கியம் பெண் 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்…