in

ஜனநாயக கடமையை ஆற்றாத மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்


Watch – YouTube Click

ஜனநாயக கடமையை ஆற்றாத மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர், கும்மிடிப்பூண்டியில் வாக்கு இருப்பதால் வாக்களிக்கவில்லை, மயிலாடுதுறையில் வாக்களித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் உடன் பார்வையாளராக வந்து சென்றார் 

நாட்டின் ஜனநாயக தேர்தல் திருவிழா முதல் கட்டமாக துவக்கி உள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 100% வாக்களிப்பு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் மாவட்ட நிர்வாகமும் தேர்தல் ஆணையமும் ஈடுபட்ட நிலையில் நாட்டின் பிரதான கட்சி ஆன காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் சுதா கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழ்நாட்டில் கடைசியாக காங்கிரஸ் அறிவித்த வேட்பாளரான சுதா தனது வாக்கினை கும்மிடிப்பூண்டியில் இருந்து மயிலாடுதுறைக்கு மாற்றம் செய்யவில்லை. மயிலாடுதுறையில் இருந்து வாக்களிக்க சென்று வர ஒரு நாள் பிடிக்கும் என்பதால் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றவில்லை என்று தெரிய வருகிறது. இன்று மயிலாடுதுறை தூய சின்னப்பர் துவக்க பள்ளியில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜ்குமார் வாக்களித்த போது அவருடன் பார்வையாளராக சுதா வந்து சென்றார் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் மாலையில் சந்திப்பதாக கூறி விட்டு சென்று விட்டார்.


Watch – YouTube Click

What do you think?

தேர்தலை புறக்கணித்து போராட்டம் வாக்குச்சாவடி வெறிச்சோடியதால் பரபரப்பு

85 வயது ஆன பிரபல 5ரூபாய் டாக்டர் வாக்கு நீக்கப்பட்டதால் அதிர்ச்சி