in

சட்டசபை என்பது திரையரங்கு அல்ல. சட்ட சபைக்கென மாண்புகள் உண்டு. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேட்டி

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேட்டி

புதுச்சேரியில் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ செய்தியாளருக்கு அளித்தார்.

அப்போது அவர்,தமிழக சட்டமன்றத்தில் சில உறுப்பினர்கள் காட்டிய செய்கை சமூக வலைத்தளத்தில் வைரலானதை திங்கட்கிழமை சபாநாயகர் சுட்டிக்காட்டி கண்ணியக்குறைவாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் செவ்வாய்க்கிழமை ஒரு ஆக்சன் பண்ணிக் கொள்ளட்டுமா என சபாநாயகர் இடம் முதலமைச்சர் அனுமதி கேட்டு செய்கிறார்.இது எந்த வகையில் சரியானது என தெரியவில்லை.

சட்டசபை என்பது திரையரங்கு அல்ல. சட்ட சபைக்கென மாண்புகள் உண்டு.மரபுகளை முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழை பாதுகாப்போம் என கூறும் முதலமைச்சர்
“கதறர்ஸ்” என்கிறார்.வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதளத்தில் சின்ன குழந்தைகள் பேசுவதை முதலமைச்சர் பேசலாமா. என அவர் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவைக்குள் அப்பாவை காணோம் என கூறியது தவறு. இதற்கு திமுகவுடன் வெளியே வந்து பதிலடி கொடுத்துள்ளனர்.தனிநபர் தாக்குதல் என்பது இருக்கக் கூடாது. யார் துவக்கி வைத்தார்களோ அவர்களே துவங்காமல் இருக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

அமோனிய வாயுவால் இறந்தவர்களின் குடும்பத்தை முதலமைச்சர் தார்மீக அடிப்படையில் நேரில் பார்த்து இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்..

பேட்டி…

தமிமுன் அன்சாரி எம்எல்ஏ

What do you think?

முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

ஆர். எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நிகழ்வு