முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை
திருவண்ணாமலை தென்மாத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணை குழுமத்தின் வளாகத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அருணை கல்லூரி வளாகத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் இருதரப்பாக வருகிறது. ஒன்று அவர் அமைச்சர் பதவியில் இருந்த காலத்தில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொள்வதாகவும்.
மற்றொரு தரப்பிலிருந்து வரும் தகவல் திருவண்ணாமலை வருமானவரித்துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்ற வருவதாக கூறப்படுகிறது.தற்போது கல்லூரி வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாததால் உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


