in

திமுக உறுப்பினரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

திமுக உறுப்பினரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

 

திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் இரண்டு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை……

திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை என்பவரது இரண்டு வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு நபர்களின் வீடுகள் அலுவலகங்கள் அவர்களுக்கு நெருங்கிய உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை என்பவரின் தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள வீட்டிலும் திருவண்ணாமலை மாநகரம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த யானைக்கு உற்சாக வரவேற்பு

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு புதிய யானை கொண்டு வரப்பட்டது