in

ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில்திருத்தேர் உற்சவம்  நடைபெறுகிறது

    ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில்திருத்தேர் உற்சவம்      நடைபெறுகிறது

 

புவனகிரி ; ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் திருத்தேர் உற்சவம் விமர்சியாக நடைபெற்றது .ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து திருத்தேரில் அமர்ந்தார் .பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருப்புகழ் பாராயணத்துடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்தனர் .முன்னதாக ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு ஆலய அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

What do you think?

வடக்குப்பட்டு ஸ்ரீ மந்தவெளி அம்மன் ஆலய ஆடித் திருவிழா

16 குடிசை வீடுகள் மின் கசிவினால் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசமானது