ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம் யானை வாகனம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைய சிவரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை ஆறாவது நாள் உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஏராளமான பொதுமக்கள் பெருமாளுக்கு தீபம் காண்பித்து தரிசனம் செய்தனர் அதன்பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


