in

புதுச்சேரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; சபாநாயகர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; சபாநாயகர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

அம்மா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி ஆரோ சிட்டி சார்பில் 4வது ஆண்டாக உப்பளம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. அம்மா அறக்கட்டளை தலைவரும் அதிமுக மருத்துவர் அணி செயலாளருமான பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அன்பழகன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பணி ஆணையை வழங்கினார்.

இந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளோமா, பிடெக், எம் டெக், எம்சிஏ மற்றும் அனைத்துப் பட்டதாரிகள் என தகுதி உடையோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்களுக்கு தகுதியுடைய இளைஞர்களை நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்தனர். இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.

What do you think?

ஆடி வளர்பிறை பிரதோஷம்: சித்தானந்தா கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன் – எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த்