in

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி CIPMAA தீர்மானம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி CIPMAA தீர்மானம்

இந்திய மருந்து விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான (CIPMAA) அமைப்பின் 16வது மாநில மாநாடு புதுச்சேரி கிங் அவ்தார் ரிசார்ட்டில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாநில பெருந்தலைவர் வேங்கடசுந்தரம், மாநிலத் தலைவர் மனோஜ் பிரகாஷ், பொதுச் செயலாளர் சுந்தரராஜு, பொருளாளர் ரகுநாதன் ஆகியோர் தலைமையேற்றனர். வழிகாட்டு குழு உறுப்பினர்கள் அருண்பிரசாத், ரமேஷ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில், DPCO விலைக் கட்டுப்பாட்டில் உள்ள 760 அத்தியாவசிய மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தி குறைக்க வேண்டும், MSME நிறுவனங்களுக்கு வணிக (Commercial) மின்கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்க வேண்டும்,ஆன்லைன் மருந்து விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும், மருந்து மற்றும் பேக்கிங் பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்.

மற்றும் அவற்றுக்கான GST வரியை 18 சதவீதத்திலிருந்து 5 அல்லது 0 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன இடம்பெற்றன.மேலும், போலி மற்றும் தரமற்ற தடைசெய்யப்பட்ட மருந்துகளின் உற்பத்தி, விற்பனையை தடுக்க அரசின் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு CIPMAA முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என்றும், அதன் உறுப்பினர்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான மருந்துகளை மட்டுமே உற்பத்தி செய்து மக்களின் நலனுக்காக செயல்படுவோம் என்றும் உறுதியளித்தனர்..

அதேபோல், மருந்துப் பொருட்களின் மீதான GST வரியை 5 சதவீதமாக குறைத்து, தரமான மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகுத்த ஒன்றிய அரசுக்கு மாநாட்டில் நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் அனைத்து வகையான மருந்துகளுக்கும் தற்போது உள்ள 5 சதவீத GST-யை முழுமையாக நீக்கி 0 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது….

What do you think?

மரக்காணம் அருகே கந்தாடு புதிய தெரு கிராமத்தில் செல்லியம்மன் கோயில் பால் அபிஷேக விழா

மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண விழா கோலாகலம்