புதுச்சேரியில் சென்னை ஐஐடி கேம்பஸ் அடிக்கல்
புதுச்சேரியில் சென்னை ஐஐடி கேம்பஸ் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி… விரைவில் நடைபெற உள்ளதாக ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்!
புதுச்சேரி ஹோட்டல் அக்கார்டில் நடைபெற்ற மாநில அளவிலான MSME மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், பாதுகாப்புத் துறை உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைய, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியம் என்றும், இதில் MSME நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், புதுச்சேரியில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
சென்னை ஐஐடி கேம்பஸ் அமைப்பதற்கான அடிக்கல் விரைவில் நாட்டப்பட உள்ளதாக தெரிவித்த ஆளுநர், புதுச்சேரியில் தொழில் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


