பேருந்து நிழல்குடையில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
கும்பகோணம் அருகே பேருந்து நிழல்குடையில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு – பரபரப்பு
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா மேலச்செம்மங்குடி பேருந்து நிழல்குடையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை NH 36-ல் உள்ள மேலச்செம்மங்குடி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமரும் நிழற்குடையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இதை பார்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெலட்டூர் காவல்துறையினர் தூக்கில் தொங்கிய நபரின் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேதத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூக்கில் தொங்கிய நபர் யார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மெலட்டூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் மேலச்செம்மங்குடி பேருந்து நிழல்குடையில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.


