in

புதுச்சேரி கடற்கரை சாலையில் புதிய கிரிமினல் சட்டங்கள் கண்காட்சி

புதுச்சேரி கடற்கரை சாலையில் புதிய கிரிமினல் சட்டங்கள் கண்காட்சி

புதுவை காவல்துறை சார்பில் புதிய கிரிமினல் சட்டங்கள் *நியாய சன்ஹிதா* கண்காட்சி கடற்கரை சாலை, காந்தி திடலில் இன்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து முதல்அமைச்சர் ரங்கசாமியும் கண்காட்சியை பார்வையிட்டார். எம்எல்ஏக்கள் விக்னேஷ் கண்ணன், அழகுசுந்தரம், ராமு, தலைமை செயலர் சரத் சவுகான், டிஜிபி ஷாலினி சிங், அரசுச் செயலர்கள் கேசவன்,,முகமது அஹ்சன் அபித், டிஐஜி சத்தியசுந்தரம், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் சுரேஷ்ராஜ், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி நகராட்சி ஆணையர். ஸ்ரீஜித் அரசு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் புதிய குற்றவியல் சட்டங்கள் / நீதி சட்டங்களின் முக்கிய அம்சங்கள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மத்திய அரசின் சாதனைகள் மற்றும் மத்திய அரசின் உதவியோடு புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்த தகவல்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுப் பயனடைந்தனர்.

What do you think?

ராமேஸ்வரத்தில் முதல் முறையாக திறக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் கூடிய உணவகம், திறந்து வைத்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா.