தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுவில் உலக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கவின்மிகு தஞ்சை இயக்கம் மற்றும் பள்ளி சுற்றுச்சூழல் கல்வி திட்ட இயக்கம் ஒன்றிணைந்து பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் ராதிகா மைக்கேல் அவர்களுக்கு இயற்கையை எவ்வாறு கூட்டமைப்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவு பொருட்களை எவ்வாறு தவிர்ப்பத என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை கூறியவாறு திருமங்கலக்கோட்டை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணி சென்றனர்.


