in

ராஜகோபுரம் சாமி தரிசனம் பெயரில் வசூல் வேட்டை

ராஜகோபுரம் சாமி தரிசனம் பெயரில் வசூல் வேட்டை

ராஜகோபுரம் அருகில் ஆயிரம் முதல் 500 வரை சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக அதிகாலையில் வசூல் வேட்டை…..

ராஜகோபுரம் அருகில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்லுவதாக கூறி பெரும் கூட்டம் கிளம்பியுள்ளதால் பரபரப்பு……

இந்தக் கூட்டத்தோடு கோவில் ஊழியர்களும் தொடர்பில் உள்ளதாக சொல்லப்படும் அதிர்ச்சி தகவல்……

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் வந்த நாட்கள் மாறி தற்போது தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும் வார இறுதி நாளான இன்று நள்ளிரவு முதலே அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் வட ஒத்தவாடை தெரு ராஜகோபுரம் அருகில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமு தரிசனம் செல்லும் வரிசிலேயே அமர்ந்து தூங்கினர்.

அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டவுடன் சாமி தரிசனம் செய்வதற்காக ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கண்டு சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அதிகாலையில் கூட்டம் சேர்வதற்கு முன்பாக ஒரு தொகை நேரமாக தொகையில் மாற்றம் செய்து கல்லா கட்டுவதில் ஒரு கூட்டம் மும்முரமாக இருந்தது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு முக்கிய அதிகாரி ஒருவர் இன்று வருகிறார் ஆதலால் குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்வது சிரமம் கண்டிப்பாக போகவேண்டும் என்றால் ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் என்று அதிகாலை 3.30 மணிக்கு ராஜகோபுரம் அருகில் படு ஜோராக பிசினஸ் களைகட்டியது.

 

நேரம் ஆக ஆக சாமி தரிசனம் செய்ய 700, 500, என குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய செல்லும் கட்டணத்தை குறைத்து விறுவிறுப்பாக சாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசையில் சிலர் சுற்றித்திரிந்தனார்.

காசு கொடுப்பவர்களை ராஜகோபுரம் முன்பாக சிலர் சாவி வைத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றவர்கள் மற்றும் வாங்க என்று புரோக்கர்ஸ் கூட்டி வரும் ஆட்களை உள்ளே அனுப்பினார்.

தொடர்ந்து அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு முக்கிய அதிகாரி இன்று வருகிறார் என்று சொன்னார்கள் அது குறித்து விசாரித்த போது இந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் திடீர் விசிட் மேற்கொண்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிலும் புரோக்கர்கள் அழைத்து செல்பவர்களிடம் கூறி நபருக்கு ஆயிரம் ரூபாய் வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று இரவு திருவண்ணாமலை வந்துவிட்டார் திருவண்ணாமலையில் தங்கி உள்ளார் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என தினந்தோறும் கிளம்பும் புரளிக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார் என சமூக ஆர்வலர்கள் கேள்வி.

What do you think?

கும்பகோணத்தில் அம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்