தமிழ்நாடு முழுவதும் ஆதிராவிட மக்கள் சுடுகாடு பிரச்னைக்கு ஓராண்டில் சுமூக முறையில் தீர்வு …
புதுச்சேரி அடுத்த கோட்டகுப்பத்தில் ஆதிதிராவிடர் சுடுகாடு பிரச்னை குறித்து நேரில் ஆய்வு செய்து தமிழக அமைச்சர் வன்னிய அரசு பேட்டி .
புதுச்சேரி அருகே உள்ள பெரிய கோட்டகுப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் இடுகாடு இருந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் மீனவர்களும் தங்களது படகுகளை நிறுத்தி வருவதால், ஆதி திராவிட மக்களுக்கும் மீனவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு அங்கே அவர்களுடைய சடலத்தை புதைக்க மீனவர்கள் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரிய கோட்டகுப்பம் பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 70 வயதான பூமி லிங்கம் என்பவர் நேற்று காலை இறந்த நிலையில் அவரது சடலத்தை கடற்கரையில் உள்ள இடுகாட்டில் புதைக்க சென்ற போது மீனவர்கள் அவர்களை தடுத்து எச்சரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிராவிட மக்கள் கிழக்கு கடற்கரை சாலை கோட்டகுப்பம் சதுக்கம் அருகே இறந்தவரின் உடலோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று மாலை அப்பகுதிக்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,கோட்டகுப்பத்தில் ஆதிதிராவிடர் சுடுகாடு நிலத்தில் படகுகளை நிறுத்துவது சரி இல்லை. படகுகளை வேறு இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த நிலத்தின் ஒரு பகுதியை
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்..
ஆதிராவிடர் சுடுகாட்டிற்காக 43 சென்ட் நிலம் வேலி அமைத்து தரப்படும் என்றும் மீனவர்கள் படகு நிறுத்த ஒரு இடம் தேர்வு செய்வதற்கு நாளை அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் ஆதிராவிட மக்கள் சுடுகாடு பிரச்னைக்கு ஓராண்டில் சுமூக முறையில் தீர்வு காணப்படும் என்றும் வன்னியரசு உறுதியளித்தார்.


