in

வேளாங்கண்ணி அருகே நள்ளிரவில் மண் திருட்டு

வேளாங்கண்ணி அருகே நள்ளிரவில் மண் திருட்டு

வேளாங்கண்ணி அருகே நள்ளிரவில் மண் திருட்டு சுற்றி வளைத்த காவல்துறையினர் 2 ஜேசிபி மூன்று டிராக்டர் பறிமுதல் இரண்டு பேர் கைது தப்பி சென்றவர்களை வேளாங்கண்ணி போலீசார் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் ​வேளாங்கண்ணி அருகே உள்ள ஒரத்தூர் மாதானம் கிராமத்தில் நள்ளிரவில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

​இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 3 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

​மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட சதீஷ், அரவிந்த் ஆகிய 2 ஜேசிபி ஓட்டுநர்களைக் கைது செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த மணல் கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு..

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்று