in

64 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்து சாதனை படைத்தவர் யாழ்ப்பாணம் வருகை

64 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்து சாதனை படைத்தவர் யாழ்ப்பாணம் வருகை

 

40 வயதில் 64 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் வண்டியில் பயணித்து சாதனை புரிந்தவர் தற்போது யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பாதுசா தமீம்அன்சாரி உலகில் தற்கொலையை தடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தை விழிப்புணர்வாக கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக சைக்கிள் வண்டிப் பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஓர் விபத்தில் அகப்பட்டு வலது கையை முழுமையாக இழந்த பின்பும் மனதளவில் சோர்ந்து விடக் கூடாது என்பதோடு தன்போன்ற வர்களையும் உற்சாகம் ஊட்ட வேண்டும் என்ற சிந்தனையிலேயே சைக்கிள் வண்டிப் பயணத்தை தேர்வு செய்த்தாக தெரிவிக்கின்றார்.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி சகல மாவட்டங்களுக்கு பயணித்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ள தோடு 20 நாளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3677 கிலோ மீட்டர் பயணித்து உலக சாதனை படைத்தார்.

இந்தியா முழுவதும. பயணத்தை தொடங்கி நிறைவு செய்துள்ளது இதனை உலக நாடுகளிலும் மேற்கொள்ள விருப்பம் கொண்டு தற்போது இலங்கை வந்துள்ளேன் எனவும் இலங்கையில் 800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க திட்டமிட்டுள்ள தோடு இதனை சைக்கிள் வண்டியில் 8 நாள்களில் நிறைவு செய்யவும் முடிவு எட்டப்பட்டுள்ளது எனவும்

சாதனைகள் உடல், உள ஆரோக்கியத்திற்கு உடல் ஒரு தடை இல்லை எனவும் என்னை காண்பவர்கள் உணர்ந்து எதற்கும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல எனவும் புரிந்தது கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். இலங்கையில் சைக்கிள் வண்டிப் பயணத்தை நிறைவு செய்து அடுத்த கட்டமாக இதனை லண்டனில் மேற்கொள்ள முயற்சிக்கின்றேன் என்றார்.

இலங்கையில் சைக்கிள் வண்டிப் பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று ஆரம்பிக்கிறேன் என்றார்.

What do you think?

கைலாய யாத்திரை நிறைவு: பேரூர் ஆதீனத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

விளையாட்டில் இருந்த குழந்தை மீது வாகனம் மோதல் – பாசிப்பட்டினத்தில் பரபரப்பு