in

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்று

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்று 

கோடை விடுமுறை முடிந்து தமிழக முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர் இந்த நிலையில் நாகை காடாம்பாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் கே ஜே பிரவீன் குமார் ரோஜா பூ கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்துமகில் இன்று கிறிஸ்தவர் இஸ்லாமியர் வேதம் தரித்த மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரை கைகுலுக்கி வரவேற்றனர் .

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கான சீருடை புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் வழங்கினார் மேலும் அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு துண்டு போர்த்தி நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் 693 பள்ளிகளில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவ மாணவியர்கள் இன்று காலை சிரித்த முகத்துடன் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர் இவர்களில் 68,680 மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் சீருடை காலணி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை இன்று காலை முதல் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் நேற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சமையல் அறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து இன்று காலை மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

What do you think?

வேளாங்கண்ணி அருகே நள்ளிரவில் மண் திருட்டு

திமுக நாசமா போக காரணமே நாமதான்!” “தோத்து போனதுக்கு கைதட்டாதீங்க..