மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த வீட்டில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், கலைஞரின் தாய் தந்தையான முத்துவேலர், அஞ்சுகத்தம்மையார் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு, கலைஞருக்கு புகழ் வணக்கம் செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இல. மேகநாதன், ப. கோவிந்தராஜன், திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன்,சோ.பா. மலர்வண்ணன்,மகா. குமார், பழனியப்பன் கீழையூர் ஒன்றிய மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


