in

வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் ஆய்வு


Watch – YouTube Click

வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை 100 ஏக்க நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இங்கு வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.

இதற்கு அப்பகுதி மக்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பார்வதிபுரம் கிராம மக்கள் வள்ளலார் சர்வதேச மையம் 100 ஏக்க நிலப்பரப்பில் தற்போது 40 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை கையகப்படுத்தி அதில் சர்வதேச மையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது தொல்லியல் துறையினர் சர்வதேச மையம் கட்டும் இடத்தினை ஆய்வு செய்து மே 10 தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இன்று மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் டாக்டர்.சிவானந்தன் தலைமையில் அடங்கிய குழு இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….


Watch – YouTube Click

What do you think?

சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 15 நாட்கள் காவல் விதித்துள்ளது

நெல்லை மணிமுத்தாறு அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தண்ணீரை திறந்து வைத்தார்