அமெரிக்க கட்டிட விபத்து; முன்கூட்டியே எச்சரித்த உரிமையாளர்

 

அமெரிக்காவின் “ஃ”புளோரிடா மாகாணம் மியாமி நகரில் கடந்த வாரம் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 12 பேர் பலியாகினர். 149 பேரை தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கட்டிடம் பலவீனமாக இருப்பதை கடந்த ஏப்ரல் மாதமே அதன் உரிமையாளர் எழுத்துபூர்வமாக எச்சரிக்கை விடுத்த போதிலும், அதை குடியிருப்புவாசிகள் கண்டுகொள்ளாததே விபத்துக்கு காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரலில் குடியிருப்புவாசிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அந்தக் கட்டிடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் சில விரிசல்கள் கண்டறியப்பட்டன. இது மேலும் விரிவடைய வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

13 − thirteen =