in

அருகன்குளம் காட்டு ராமர் கோயில் வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்

அருகன்குளம் காட்டு ராமர் கோயில் வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது காட்டுராமர் திருக்கோயில். அமைதியான வனச் சூழலிலேயே இந்த ஆலயம் அமைந்திப்பதால் காட்டுராமா் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.

  மூலஸ்தானத்தில் ஸ்ரீ சீதாபிராட்டியாா் ஸ்ரீராமா் தம்பி பரதனுடன் இங்கு அருள்பாலிக்கின்றாா். தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீ காட்டுராமர் ஆலயத்தில், ராமா் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கைகூப்பியபடி அருள்பாலிக்கின்றாா். சிறப்பு மிக்க காட்டு ராமர் கோவிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இதற்காக திருக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. பின்னா் சன்னதி முன்பு கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஹோமமும் தொடா்ந்து பூா்ணாகுதியும் நடைபெற்றது. பின்னா் மூலவா் ஸ்ரீராமா் சீதாபிராட்டியாா் சமேத லெட்சுமணா் ஆகியோருக்கு மஞ்சள்பொடி, வாசனைபொடி, மாபொடி,பால்,தயிா், பஞ்சாமிருதம், சந்தணம் போன்ற நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைப்போல அபயகஸ்த ஆஞ்சனேயருக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன. நிறைவாக கலசங்கள் ஆலய பிரதஷணமாக கொண்டு வரப்பட்டு விமானம், மூலவா் மற்றும் ஆஞ்சனேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த ஸ்ரீ ராமா் சீதை லெஷ்மணருக்கு மஹா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சீதாராமரை தாிசித்து அருள்பெற்றனர்.

What do you think?

செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் விமானத்தில் செல்கிறார்கள்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா ஸ்ரீ விநாயகர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.