எரிவாயு விலை குறைப்பு கோரி நாகையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைத்திட வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாகையில் கண்டன ஆர்பாட்டம்.
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் அவுரித்திடலில் மாவட்ட தலைவி மாலா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.
அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்திட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு திட்டத்தை நிரந்தரமாக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுபாதேவி, மாவட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.


