மிரட்டப்படும் தமிழகம், விரட்டப்படும் விவசாயிகள்
பஞ்ச் டயலாக் பேசி பாதகம் ஏற்படுத்தாமல் விவசாயிகளை பாதுகாக்க முன்வருவாரா விஜய் தம்பி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
மேதகு ஆளுநர் உரையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நிதி நிலைமை சீரானதும் அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வரும் காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது கிணத்துல் போட்ட கல் மாதிரி போய்விடுமோ என்று இப்போது எல்லோருக்கும் கவலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே பழைய பல்லவியை எடுத்து பாட ஆரம்பித்து விட்டார் நம்முடைய முதல்வர் விஜய் தம்பி.
மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் இதனால் தற்போது விவசாயிகள் போராட்ட களமாக தமிழகத்தை மாற்றி இருக்கிறார்கள் .
மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையிலே நாற்றங்கால், உழவு உள்ளிட்ட ஆயத்தப் பணிகளில் இருந்த டெல்டா விவசாயிகள் தற்போது பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறர்கள். பயிர் கடன் தள்ளுபடியிலும் விவசாயிகளை விரட்டுகிறது தமிழகத்தின் மிரட்டுகிறது,
அண்டை மாநிலங்களாக கர்நாடகா மேகதாது . அணை கட்டுவேன் என்று கூறுகிறது இதனால் விவசாயிகள் விரட்டப்படுகிறார்கள் தமிழகத்தை மிரட்டுகிறது.
கேரளா அரசு புதிதாக பதவி ஏற்றிருக்கிறது அதில் முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவோம் என்று கூறியுள்ளார்கள் இதனால் விவசாயிகளை விரட்டுகிறது தமிழகத்தை மிரட்டுகிறது.
குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாலே இன்றைக்கு விவசாயி விவசாயத் தொழிலாளர்கள் சுமார் 20 லட்சம் பேர்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கிறார்கள்.
இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் பன்னிரெண்டாம் தேதி திறக்க வேண்டிய தண்ணீரை திறக்காதால் 1125 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கண் துடிப்புக்காக குறுவை சிறப்பு தொகுப்பை அறிவித்திருப்பது அரசு அறிவித்துள்ளது .இது நிலத்தடி நீரை நம்பி இருக்கிற விவசாயிகளுக்கு வேண்டுமானாலும் பயன் அளிக்க கூடியதாக இருக்கலாம் ஆனால் ஆற்று நீர் பாசனத்தை நம்பி இருக்கிற விவசாயிகளுக்கு அது பலன் கொடுக்காது என்பது எல்லோருக்கும் அறிந்து ஒன்றுதான்.
ஆகவே இன்றைக்கு ஆளுநர் உரையில் நிதி நிலைமை சீரான பின் அரசு அறிவித்த அனைத்து திட்டங்கள் வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்பது அரைத்த மாவை அரைத்து புளித்தது போடுவது போல தான் தமிழக மக்களுக்கு இருக்கிறது .
ஆகவே கிணத்தில் போட்ட கல்லாக இப்போதே நமக்கு ஏற்பட்டிருக்கிறது. என எதிர்காலம் அச்சமாக உள்ளது.
ஆகவே திரையில் தோன்றி மக்களை அதிரடியாக காப்பாற்றும் கதாநாயகனாக விஜய் தம்பி எத்தனையோ திரைப்படங்களிலே அதிரடி காட்டி இருக்கிறார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கிற நமது விஜய் தம்பி விவசாயிகள் பாதிக்கப்படுவதை ஆதரத்தோடு அள்ளிக் கொடுத்து அண்டை மாநிலங்களிடத்திலே அதிரடி காட்டினாலும் சரி, அமைதி காட்டினாலும் சரி நம் ஜீவாதார உரிமையை மீட்டெடுப்பாரா?
இல்லை எப்போதும் போல அவர் பஞ்ச டயலாக் பேசி விவசாயிகளை பஞ்சர் ஆக்குவாரா ?
ஆரம்பமே விமர்சனமா என்று யாரும் நினைத்து விடக்கூடாது அரசு விழிப்போடு முன்னெச்சரிக்கையாக இல்லை என்றால் கர்நாடகத்திலே ஏற்கனவே கட்டப்பட்ட மூன்று அணைகளை போல இந்த மேகதாது அணை கட்டிவிட்டால் இனி தமிழகம் பாலைவனம் ஆவதை விஜய்யால் காப்பாற்ற முடியாது விஜயினுடைய தந்திரங்களும் காப்பாற்ற முடியாது விஜயினுடைய சினிமா வசனமும் காப்பாற்ற முடியாது என கூறினார்.


