in

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா …

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா …

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது இளநிலை மருத்துவ (2020 பேட்ச்) மற்றும் முதுநிலை மருத்துவ (MD/MS/MCh – 2022 பேட்ச்) மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் துணை முதல்வர்
டாக்டர் பி. ஸ்டாலின், (முதுநிலை ஆராய்ச்சி பிரிவு), வரவேற்புரை வழங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் இளநிலை மாணவர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார்.

கல்லூரி பதிவாளர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
இவ்விழாவின் தலைமை விருந்தினராக பெங்களூர் பொது சுகாதார மைய இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் பிரதீப் கௌர் கலந்து கொண்டு, 153 இளநிலை மாணவர்களுக்கும் 53 முதுநிலை மாணவர்களுக்கும் பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வை டாக்டர் நிஷாந்த் ராஜன், துணை முதல்வர் (இளநிலை பிரிவு) மற்றும் துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின் (முதுநிலை ஆராய்ச்சி) ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கல்லூரியின் கல்வி, ஆராய்ச்சி, நோயாளர் பராமரிப்பு மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளில் பெற்ற சாதனைகளை விளக்கும் ஆண்டு அறிக்கையை இயக்குநர்-முதல்வர் டாக்டர் ரேனு ஜி’பாய் வர்கீஸ் சமர்ப்பித்தார். பின்னர் சிறப்பு விருந்தினர்.

பேராசிரியர் பிரப்தீப் கௌர், பல்வேறு பாடங்களில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி பேசுகையில் சமூகத்திற்கு முழுமையான சுகாதார சேவையை வழங்கும் நோக்குடன் செயல்பட மாணவர்களை ஊக்குவித்தார். மருத்துவர்களிடையே உணர்ச்சி நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும், சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

துணைத் தலைவர் திரு. ஜோசப் ஆபிரகாம் முதுநிலைத் தேர்வில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
பொருளாளர் டாக்டர் சுசன் தாமஸ், ஆராய்ச்சி பிரிவு க்கான விருதுகளை இளநிலை மாணவர்களுக்கு வழங்கினார்.

சர்வதேச தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்ட ஆசிரியர்களுக்கு வெளியீட்டு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. பின்னர் முக்கிய நிகழ்வாக டாக்டர் ஐஸ்வர்யா “சிறந்த மாணவி க்கான 2026 (Best Outgoing Student) விருது மற்றும் தங்கப் பதக்கத்தை பெற்றார்.

மற்றும் டாக்டர் லிடியா ஃப்ளோரன்ஸ் “சிறந்த அனைத்துத் துறை திறமையாளர்” (Best All Rounder) மற்றும் “சிறந்த விளையாட்டு வீரர்” (Best Sports Person) ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை பெற்றார்.

நன்றியுரையை டாக்டர் மருத்துவ கல்வி பிரிவு பேராசிரியர் நாயர் இக்பால், வழங்கினார்.

இப்பட்டமளிப்பு விழாவில் நிர்வாகிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

அண்ணா திடல் வணிக வளாகக் கடைகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

மிரட்டப்படும் தமிழகம், விரட்டப்படும் விவசாயிகள்