புதுச்சேரி..போதையில் தறிகெட்டு ஓடிய கார்..சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து…
கோடை விடுமுறை என்பதால், புதுச்சேரிக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் பொது மக்கள் சுற்றுலா வருகின்றனர். அதுபோல், மதுரை பகுதியை சேர்ந்த நண்பர்கள் 6 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இன்று மாலை வீராம்பட்டினம் கடற்கரையில் மது அருந்து விட்டு கடற்கரையில் குளித்துள்ளனர். பின்னர் ஒரு காரில் புறப்பட்டு புதுச்சேரிக்கு சென்றுள்ளனர். அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் சந்திப்பு அருகே சென்ற போது மது போதையில் இருந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறி கெட்டு ஓடியது. ஒரு கட்டத்தில், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளின் மீது மோதி இடித்து நின்றது.
இதில், அங்கிருந்த ஓட்டல் ஊழியர் ஒருவர் லேசான காயமடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இந்த விபத்தில் காரின் முன் சீட்டில் அமர்ந்து வந்த வாலிபர் லேசான காயமடைந்தார். விபத்து ஏற்படுத்தி தப்பியோட முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மா அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


