புதுச்சேரி அருகே கஞ்சா விற்க முயன்ற 2 வாலிபர்களை போலிஸார் கைது செய்தனர்
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காட்டேரிக்குப்பம் சுடுகாடு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்.
உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா மறைத்து வைத்திருந்து தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் காட்டரிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாஸ் (21), துத்திப்படு சேர்ந்த பிலோமின் தாஸ் (25) என்பதும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய, வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசர் அவர்களிடம் இருந்த 95 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குபதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்