in

2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் இன்று நடைபெற உள்ளது

2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் இன்று நடைபெற உள்ளது

தமிழ்நாடு அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது.

திரைப்பட விருதுகள் யார் யாருக்கு அறிவிக்கப்பட உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் அந்த வகையில் 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையாவது தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டிஎன் ராஜா ரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது.

மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு பே சாமிநாதன் விருந்தினர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ஊக்க பரிசுகளையும் வழங்கி கௌரவிப்பார்.

சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், சிறந்த டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கான விருதுகளை யார் யார் பெறுகிறார்கள் என்ற விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

சிறந்த படத்திற்கான விருதினை ‘தனி ஒருவன்’ பெறுகிறது.

சிறந்த திரைப்படத்திற்கான காண இரண்டாம் பரிசை ‘பசங்க 2’ படத்திற்கும் மூன்றாம் பரிசை ‘பிரபா’ என்கின்ற படத்திற்கும்

சிறப்பு பரிசை ‘இறுதி சுற்று’ மற்றும் ’36 வயதினிலே’ என்ற படத்திற்கும் கிடைத்துள்ளது.

மேலும் சிறந்த நடிகருக்கான விருதை இறுதி சுற்றில் நடித்த மாதவனுக்கும் சிறந்த நடிகைக்கான விருதை 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும் வழங்கப்பட உள்ளது.

வை ராஜா வை என்ற படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசை பெறுகிறார்.

சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசை இறுதிச்சுற்றில் நடித்த நடிகை ரித்திகா சிங் பெறுகிறார்.

சிறந்த வில்லனுக்கான விருதை தனி ஒருவன் படத்தில் நடித்ததற்காக அரவிந்த்சாமிக்கும் நகைச்சுவைக்கான விருதை அஞ்சு ஒன்னு என்ற படத்தில் நடித்த சிங்கப்புலிக்கும்

சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை தேவதர்ஷினிக்கும் வழங்கப்படுகிறது .

மேலும் சிறந்த நடிகைக்கான விருதை பாபநாசம் படத்தில் நடித்த கௌதமிக்கும்

சிறந்த இயக்குனராக சுதா கொங்கராவுக்கும்

சிறந்த கதாசிரியராக தனி ஒருவன் படத்திற்காக மோகன் ராஜாவுக்கும்

சிறந்த இமைப்பாளருக்கான விருதை ஜிப்ரன் பெறுகிறார் .

36 வயதினிலே படத்திற்காக பாடலாரியாருக்கான விருதினை விவேக்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும் சிறந்த பின்னணி பாடகராக கானா பாலா மற்றும் பாடகையாக கல்பனா ராகவேந்திரா தேர்வாகிவுள்ளனர்.

சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை தனிய ஒருவன் படத்தில் பணியாற்றிய ராம்ஜிக்கும்

நடன ஆசிரியருக்கான விருதை பிருந்தாவுக்கும்

சிறந்த காஸ்டியூம் டிசைனராக வாசுகி பாஸ்கருக்கும்

சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக மாஸ்டர் நிதீஷ் மற்றும் பேபி வைஷ்ணவி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

தனி ஒருவன் படத்திற்காக இத்தனை விருதுகள் கொடுக்கப்பட்டாலும் அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜெயம் ரவிக்கு எந்த விருதும் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றமே.

What do you think?

நகை திருடி கைதான நடிகை

ராதாரவி போல தவறான ஆளுங்க இருக்கும் இடத்திற்கு நான் ஏன் போக வேண்டும் … பாடகி சின்மயி