சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி – சுற்றுச்சூழலுக்காக மரக்கன்றுகளை நட்ட வீ த லீடர்ஸ் அமைப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை உத்தரவின் பேரில் சின்ன நொளம்பை சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கோயில் வளாகத்தில் குப்பைகள் அகற்றி,மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதனை தொடர்ந்து கையில் மரக்கன்றுகளை ஏந்தியபடி, “காப்போம் காப்போம், இயற்கை வளங்களை காப்போம்” என முழக்கமிட்டு, செஞ்சி காந்தி பஜார் வழியாக செஞ்சி நான்கு முனை சந்திப்பு வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், நிகழ்ச்சியின் நிறைவில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இப்பேரணியில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


