in

25 வகையான கேரள உணவுகள் வாழை இலையில் பரிமாற்றம்

25 வகையான கேரள உணவுகள் வாழை இலையில் பரிமாற்றம்

 

புதுச்சேரி… ஓணம்திருவிழா.. 25 வகையான கேரள உணவுகள் வாழை இலையில் பரிமாற்றம்.. ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்த உணவுப் பிரியர்கள் …

கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஓணம். இதில் “ஓணம் சத்யா” எனப்படும் பாரம்பரிய சைவ விருந்து வாழை இலையில் பரிமாறப்படும்.

இதனை புதுச்சேரியில் உள்ள ஒரு சில கேரள பாரம்பரியமிக்க உணவுகள் மட்டுமே இன்று வழங்கின.. இதனை சாப்பிடுவதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்த உணவு பிரியவர்கள் ஆர்வத்துடன் உணவே ருசித்து சாப்பிட்டனர்.

ஓணம் சத்யாவில் அவியல், எரிச்செரி, பச்சடி, கூட்டுக்கறி, ஓலன்,புளிச்சேரி, கூட்டுக்கறி, சாம்பார், மற்றும் பல இனிப்பு வகைகளான அடையப்ப்ரதமன்,
நேந்திர பழ பாயாசம், கறிகள், உலர் காய்கறிகள்,தேங்காய் பால் கறி, பப்படம்,
வாழைக்காய், மரவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ் என 25வகையான கேரள பாரம்பரியமிக்க உணவுகள் பரிமாறப்பட்டன.

What do you think?

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி சிறப்பு அபிஷேகம்

உத்தனப்பள்ளியில் ஸ்ரீ ரேணுகா எல்லம்மா தேவி ஆலய மஹா கும்பாபிஷேகம்