புதுச்சேரியில் உள்ள சிறு விவசாயிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்
புதுச்சேரியில் உள்ள சிறு விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என காரை மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை மாநிலம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையானது விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் நெல் பயிர் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை நெல் சாகுபடி செய்த பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ-5000/- மற்றும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ-6000/- வழங்கப்பட்டு வந்தது.
தற்போது பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்க தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ-6000/-மாகவும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ-7000/- மாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2025-2026 ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த 3618 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ-6000/- வீதம் 7145.03 ஏக்கருக்கு ரூ-4,28,70,180/- ( ரூபாய் நான்கு கோடியே இருபத்து எட்டு லட்சத்து எழுபதாயிரத்து நூற்று எண்பது மட்டும்), 599 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ-7000/- வீதம் 743.31 ஏக்கருக்கு ரூ-52,03,170/-ம் (ரூபாய் ஐம்பத்து இரண்டு லட்சத்து மூன்றாயிரத்து நூற்று எழுபது மட்டும்) ஆக மொத்தம் ரூ-4,80,73,350/- ( ரூபாய் நான்கு கோடியே எண்பது இலட்சத்து எழுபத்து மூன்றாயிரத்து முன்னூற்று ஐம்பது மட்டும்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, இத்தொகைக்கான காசோலையை புதுவை அரசு முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் G.N.S.ராஜசேகரன் முன்னிலையில், சட்டப்பேரவைத் எதிர்கட்சி தலைவர் நாஜீம் சட்டபேரவை உறுப்பினர் விக்னேஷ்வரன் புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் ஜெயசங்கர் காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் மற்றும் காரை மாவட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய காரை மாவட்ட விவசாயிகள்…
சிறு விவசாயிகளுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இது வஞ்சிக்கும் முறையாகவும் சிறு விவசாயிகளான அனைவருக்கும் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பேட்டி:ராஜேந்திரன் காரை மாவட்ட விவசாயி.

