இந்திய அளவில் நடைபெறும் 18வது ஈஷா கிராமோத்சவம்
கைப்பந்து போட்டி
இந்திய அளவில் நடைபெறும் 18வது ஈஷா கிராமோத்சவம்
கைப்பந்து போட்டி புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி கூடப்பாக்கம் குலோத்துங்க சோழன் விளையாட்டு திடலில் 18வது ஈஷா கிராமோத்சவம் சார்பில் இந்திய அளவில் 10 மாநிலங்களில் நடைபெறும் இந்த கைப்பந்து போட்டியின் முக்கியத்துவம் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் ‘புத்துணர்வு கோப்பை- 2026 க்கான முதல் கட்ட கிராமிய விளையாட்டு திருவிழா

கூடப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான
கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த போட்டியை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார் இதில் புதுச்சேரி மற்றும் தமிழக அளவில் நடத்தப்படும் இப்போட்டியில் 33 அணிகள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர் இதில் தேர்வாகும் இரு அணிகள் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வாகி விளையாடுகிறது வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 5 லட்சம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் அந்தந்த அணிகள் அடுத்த கட்டம் நடைபெறும் போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர் செப்டம்பர் 4.5.6.ஆகிய தேதிகளில் கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை ஈஷா தன்னார்வளர்கள் கூடப்பாக்கம் குளத்துங்க சோழன் நற்பணி மன்ற விளையாட்டு வீரர்கள் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர்.
