in

கவின் தன் லட்சியத்தை அடைந்தாரா? ஸ்டார் திரை விமர்சனம்


Watch – YouTube Click

கவின் தன் லட்சியத்தை அடைந்தாரா? ஸ்டார் திரை விமர்சனம்

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர் ,மற்றும் ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான ஸ்டார் திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் . கலை ..யாக கவினும் , லால் என்ற கதாபாத்திரத்தில் பாண்டியன் ,கவினின் அம்மாவாக கீதா கைலாஷ் நடித்திருகின்றனர்.

தன்னால் இந்த உலகத்தில் சாதிக்க முடியாததை தன் மகனை வைத்து சாதிக்க நினைக்கிறார் கவினின்அப்பா. அற்புதமான உணர்ச்சிகரமான நடிப்பால் பின்னி எடுத்திருக்கிறார் அப்பா.. லால். தன் அப்பாவின் கனவை பற்றி கவலைப்படாமல் ஜாலியாக நண்பருடன் ஊர் சுற்றும் வாலிபனாக இருக்கிறார் கவின் . தன் நடிப்பு கனவை நினைவாக்க மும்பை செல்கிறார் கவின்.

பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறு கதாபாதிரத்தில் நடிக்க கவினுக்குவாய்ப்பு கிடைக்கும் போது தீடிர் என்று ஏற்படும் விபத்தால் முகத்தில் காயம் உண்டாக தன் கனவு சிதைந்து விட்டதே என்று உடைந்து போகும் கவின் குடும்ப கஷ்டதிற்காக வேலை வேலைக்கு செல்கிறார். கவின் நடிகரானாரா? தான் லட்சியத்தை அடைந்தார என்பது தான் மீதி கதை. திரைகதை மெதுவாக நகர்கிறது கவின் நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை தான் இந்த படத்திற்கு முக்கிய பலமே .

முதல் பாதியில் வரும் நடிகை ப்ரீத்தி மற்றும் இரண்டாம் பாதியில் வரும் அதிதி இருவரும் தனக்கு கொடுக்க பட்ட வேலையை சரியாக செய்திருகின்றனர். சில காட்சிகள் ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறது சினிமாவை வெறித்தனமாக நேசிக்கும் ரசிகர்களுக்கு ஸ்டார் படம் நிச்சயம் பிடிக்கும் ட்ரைலரை பார்க்கும் பொழுது படம் நிச்சயம் வேற லெவல்..ல இருக்கும் எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே இனிவரும் நாட்களில் ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடம் மின்னுமா என்று பார்ப்போம்


Watch – YouTube Click

What do you think?

பத்மபூஷன் விருது பெற்ற பிரேமலதா

விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்.. கருப்பு எம்.ஜி.ஆர் …இன்னு பட்டம் கொடுத்த விவசாயிகள்