in

காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஆடிமாத பரணி தீபம்

காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஆடிமாத பரணி தீபம்

 

நாமக்கல் மோகனூர் காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஆடிமாத பரணி தீபம் – ஏற்றப்பட்டது – வழிபாடு செய்த பக்தர்கள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் சிவ ஆலயம் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த ஸ்தலம் அசையா தீபம் மூலவர் முன் பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு தேவார வைப்பு ஸ்தலம் 1000 ஆண்டு முன் பழமை சிவ ஆலயத்தில் ஆடி மாத பரணி தீபத்தை முன்னிட்டு மூலவர் அசலதீபேஸ்வரவிற்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கலசதீர்த்தம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக, அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்பு ஆராதனைகளும் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.

பின் பரணி தீபம் ஏற்றப்பட்டு திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் முன் உள்ள தீபக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

நாமக்கல் களங்குளம் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி

பொன்மலை ஶ்ரீ நவ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்